மாற்று! » பதிவர்கள்

சேவியர்

வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !    
October 23, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »

“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்ப...    
October 23, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில் எத்தனை மருந்துகள் உண்மையானவை ? எத்தனை மருந்துகள் போலியானவை ? எனும் கேள்வியை எப்போதாவது நாம் எழுப்பியதுண்டா ? மேலை நாடுகளிலெல்லாம் மருத்துவரின் மருந்துச் சீட்டு...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : சாயம் பூசா சம்பா அரிசி !    
October 21, 2008, 8:10 am | தலைப்புப் பக்கம்

கவலைகளின் மீது கல்லெறியக் கற்றுக் கொண்டேன். நேற்றுவரை என் இதயத்துக்குள் விழுந்த இனிய நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு சோகத்தை மட்டுமே ஓட விட்டிருந்தேன் மனதின் பாதைகளில். புரிந்து விட்டது… வாழ்க்கை என்பது கவலை ஆணிகளால் நெய்யப்படும் சவப்பெட்டி அல்ல. அதோ அந்த நீள் கடலின் சிறு துளி நான்… இதோ இந்த மணல் மேட்டின் ஒரு அணு நான்… என் கரங்களின் ரேகையைப் பிடுங்கி விட்டு பூமத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…    
October 20, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்

பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது. பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி வரும் வாய்ப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது என்கிறது உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. உடனடி காபி பவுடர் வாங்கி காப்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

துயரத்தைத் தாண்டலாம் !!! புதிய ஆராய்ச்சி    
October 19, 2008, 9:42 am | தலைப்புப் பக்கம்

எதிர்பாரா மரணங்கள் மனிதனை உலுக்கி எடுக்கின்றன. அதுவும் கண்ணுக்கு முன்னாலேயே அன்புக்குரியவர்களைப் பலிகொடுக்கும் துயரம் அளவிட முடியாதது. சுனாமி, நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் உடனிருப்பவர்களை பித்துப் பிடித்தவர்களைப் போல ஸ்தம்பிக்க வைத்து செயலிழக்க வைக்கின்றன. உலக அளவில் இத்தகைய துயரங்கள் ஏற்படுத்தும் மூளை பாதிப்புகளால் பல்லாயிரம் பேர் சுய நினைவு இன்றியும், அதிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ரோபோ : இது புதுசு !!    
October 9, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்

முதலில் ரஜினியும் ஐஸ்வர்யாராயும் மச்சு பிச்சுவில் ஆடியதைக் காட்டினார்கள். பின்னர் ரஜினி கோவாவில் ஹாயாய் அமர்ந்திருப்பதைக் காட்டினார்கள். இப்போது என்ன புடிச்சாங்க எனும் எதிர்பார்ப்போடு வந்தீர்களெனில் கொஞ்சம் நிதானம் கொள்ளுங்கள். இது நிஜ ரோபோவின் படங்கள் ! ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் வழக்கம் போலவே இந்த முறையும் ஒரு புதிய ரோபோவைத் தயாரித்து வியக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஓவிய உடலில் ஓவியங்கள் !    
October 8, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

நான்காவது உலக உடல் ஓவியப் போட்டிப் படங்கள் ! என்ன சொல்ல வராங்கன்னு புரியலை ! வாவ் என வியக்க வைத்த படம் ! எவ்வளவு உழைப்பு !!!! (சிரிக்காமல் நிற்கும் மாடல் தான் பாவம்..        ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை

கவிதை : அருகிருக்கும் மௌனம்    
October 3, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

எத்தனை விலையுயர்ந்த வாழ்த்து அட்டை அனுப்பினாலும் உன் விரலெழுதிய வரிகளைத் தான் திரும்பத் திரும்ம வாசித்துச் சிலிர்க்கும் மனம். ஏதும் எழுதாமல் நீ அனுப்பும் பகட்டு அட்டையை விட நீ ஏதேனும் கிறுக்கி அனுப்பும் தபால் அட்டை மிக அழகு. அழகழகாய் அடுக்கி வைத்து நீ அனுப்பும் பூங்கொத்தை விட உன் சீண்டல் பூக்கவைக்கும் பூக்கள் கொள்ளை அழகு. தொலைபேசியில் ஒலிக்கும் உன் குரலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இப்படியும் ஒரு நோய் !    
October 3, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போது உங்கள் உடலெல்லாம் தொப்பல் தொப்பலாக குருதியில் குளித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ? அது உங்கள் உடலில் இருந்து வழிந்த குருதி எனவும், உடலில் காயம் ஏதும் ஏற்படாமலேயே உங்கள் உடலிலுள்ள குருதி சும்மா வழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தால் உங்கள் அதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் ? அந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : இது மட்டும்    
October 3, 2008, 4:25 am | தலைப்புப் பக்கம்

எழுதி முடித்த மறுவினாடி பழசாகின்றன புள்ளி விவரங்கள். வாசித்து மடித்த மறு வினாடி பழசாகின்றன கடிதங்கள். கைகுலுக்கிக் கடந்து போன அடுத்த கணம் விரல்களிலிருந்து உதிர்கிறது நட்பு. விடைபெற்று வேறோர் விரல் பிடித்து நடை பெற்றவுடன் கசப்பாய் வழிந்தது காதல். கடந்த வினாடியின் நீட்சியில் புது வினாடிகளே முளைக்கின்றன. புதிதென்று சொந்தம் கொள்ள கடந்த வினாடியின் வரலாற்றுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அப்பாவின் நினைவாக…    
September 29, 2008, 2:03 am | தலைப்புப் பக்கம்

வெறும் நான்கு வருடங்கள் தானா ? ஒரு ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும் என்றல்லாவா நினைத்தேன் என்கிறது மனது. ஒரு வழிகாட்டியாய், தோழனாய், தியாகியாய், கடமை தவறாத அப்பாவாய் என எத்தனையோ பரிமாணங்களைக் காட்டிய தந்தை மறைந்தபின் நாட்கள் சுமை இழுக்கும் கழுதையைப் போல பெருமூச்சு விட்டுத் தான் நகர்கிறது. . வரப்புகளில் எனை நடக்கப் பழக்கியதும், சர்ப்பக் குளத்தில் நீச்சல் பழக்கியதும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சிறுகதை : கொல்லன்    
September 25, 2008, 9:13 am | தலைப்புப் பக்கம்

“ அப்பா…. என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங்… டொங்ங்.. ன்னு கேட்டுக்கிட்டே இருக்கு. என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியல. இந்த சத்தத்தை நிறுத்த முடியாதா ?” கொஞ்சம் செல்லம், கொஞ்சம் வேண்டுகோள் கலந்து கேட்டாள் அபினயா. அபினயா, பரந்தாமனின் செல்ல மகள். ஒரே மகள், லண்டனில் போய்ப் படித்து விட்டு இப்போது தான் தந்தையின் கிராமத்துக்கு வருகிறாள். பரந்தாமனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கவிதை : மரணத்துக்கு முந்தைய ஜனனம்    
September 24, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஜனனம் வேண்டும் எனக்கு. நானாய் ஜனிக்கும் ஜனனம். எனக்குள் ஏராளம் சிலந்தி வலைச் சிந்தனைகள், அறுக்க அறுக்க அனுமார் வாலாய், வெட்ட வெட்ட இராவணத் தலைகளாய் சளைக்காமல் முளைக்கின்றன. என் ஜனனத்தின் ஜன்னலோரம் நான் கண்விழித்தபோதே இமை மூடிக் கிடந்தது எனக்கான வாழ்க்கை. என் பால்ய வயதுப் பருவத்தின் அரை டிராயர் அவசர காலங்களில், என் கால்களுக்குக் கீழே ஒட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கவிதை மனிதம்

சிறுவர்கள் + கைப்பேசி = 5 x புற்று நோய் வாய்ப்பு    
September 24, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு சிறுவர்களின் கைகளில் சாவாகாசமாய் அமர்ந்திருக்கின்றன விதவிதமான கைப்பேசிகள். பெரியவர்களுக்கு அழைப்பு வரும்போது கைப்பேசியை குழந்தைகளின் கையில் கொடுப்பதும் அவர்கள் அதை காதில் வைத்து வெகு நேரம் பேசுவதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது. கைப்பேசி பயன்படுத்துவது ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : காதல் செய்.    
September 23, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்

காதல் எப்போதுமே புரியாதவைகளின் புதையல் தான். கேள்விகளே விடைகளாவது இங்கு மட்டும் தான். தெரியவில்லை என்ற பதில் தான் அதிகமாய் இங்கே பரிமாறப்படும். நடக்குமா என்னும் வினாக்களுக்கும், முடியுமா எனும் முகப்பாவனைகளுமே காதலின் வழியெங்கும். ஒவ்வோர் மனசுக்கும் தன் காதல் மட்டுமே தெய்வீகம், மற்றவை எல்லாம் மோகத்தின் வேஷங்கள். பார்க்குமிடமெல்லாம் பிரமிடுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

செம்புலப் பெயல் நீர் : கவிதையும் காதலும்    
September 23, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்

கவிதைகளிலிருந்து காதலையும், காதலில் இருந்து கவிதையையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. சங்கம் முதல் இன்று வரை கவிதைகள் காதலையும், காதல் கவிதையையும் ஒன்றுக்குள் மற்றொன்றை ஊற்றி நிரம்பியிருக்கின்றன.காதலியை மனக்கண்ணுக்கு முன்னால் நிறுத்தினால் போதும் கவிதைத் தமிழ் காதலனின் விரல்களில் வழிந்தோடும். அதே நிலை தான் காதலனை நினைக்கும் காதலிக்கும். எனவே தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அறிவியல் வீதியில் தமிழ்    
September 23, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்

கலை கலைக்கானது எனும் விவாதங்களை விட்டு இலக்கியம் இன்று வெகுதூரம் விலகி வந்து சமூகத்தோடு இணைந்து விட்டது. இலக்கியம் இணைந்த அளவுக்கு நமது தமிழ் சமூகத்தோடு இணைந்ததா என்பது கேள்விக்குறியே.அறிவியல் என்றாலும், புதிய மேனாட்டு கண்டுபிடிப்புகள் என்றாலும், அறிவியல் விதிகள் என்றாலும் ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லப்பட முடியும் எனும் குருட்டுத் தனமான விவாதங்கள் நமது மொழித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

தவிக்கும் ஜிம்பாவே : ஒரு கோழி முட்டை ஐந்து கோடி டாலர்கள்    
September 22, 2008, 5:09 am | தலைப்புப் பக்கம்

ஒரு கோழி முட்டையின் விலை ஐந்து கோடி ரூபாய்கள். அதிர்ச்சியடையாதீர்கள், இது தங்க முட்டைக்கான விலை இல்லை சாதாரண கோழி முட்டைக்குத் தான் இந்த விலை. ஜிம்பாவேயில் !!! இந்த கிரிக்கெட் விளையாட்டைத் தவிர்த்துப் பார்த்தால் நமக்கு அந்த நாட்டைப் பற்றி என்ன தெரியும் நமது இந்திய நாடு அதிகபட்சமாக சந்தித்த பணவீக்க விழுக்காடு 14 தான். இப்போது சுமார் பன்னிரண்டு விழுக்காடு...தொடர்ந்து படிக்கவும் »

சிறுகதை : இரண்டாவது சாவு    
September 17, 2008, 2:50 am | தலைப்புப் பக்கம்

( என் நண்பனின் கல்லூரியில் நடந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட சிறுகதை) சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி …. எதிரே இருந்த கல்லூரி கேண்டீன் சுவரில் மோதியது படுவேகமாக…. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் தூக்கி வீசப்பட்டார்கள் வண்டியை ஓட்டிவந்த ராஜேஷும், பின்னால் அமர்ந்திருந்த விக்கியும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கவிதை : இனிமேலுமா ?    
September 16, 2008, 1:55 am | தலைப்புப் பக்கம்

ஒரு சுவாசத்துக்கும் மறு சுவாசத்துக்கும் இடைப்பட்ட பொழுதிலும் உனைச் சுவாசிக்க நினைக்கிறது மனசு. புதையல் தேடி அலைவோர் மத்தியில் புதையலோடு அலைவதாய்ப் படுகிறது நீ அருகில் இருக்கையில். உணர்வுகள் மெலியும் போது வலி உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது. இதயம் துடிக்கும் ஓசை இடிவிழும் ஓசையாய் செவிகளை உடைக்கிறது. என் மன இருக்கையை நீ மடித்து வைக்கும் போது. நீ பற்றவைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் !!!    
September 12, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்

  வெளியூருக்குச் செல்லும்போதெல்லாம் வாசிப்பதற்கென்று நான்கைந்து புத்தகங்கள் எடுத்துச் செல்ல விரும்புவோம். ஆனால் எடை பயமுறுத்தும். கடைசியில் வீட்டில் இருக்கும் புத்தகங்களில் எடை குறைவான நூல்களின் ஓரிரு நூல்களை எடுத்துக் கொண்டு  திருப்தியடைந்து விடுவோம். சில புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென ஆர்வம் கொப்பளிக்கும், ஆனால் தெளிவற்ற எழுத்துக்களும், பழைய சிதைந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இளைஞர்களைப் பிடிக்கும் இணைய வலை    
September 8, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

எப்போ பார்த்தாலும் இணையம், இணையம் என்று கணினியே கதியாகக் கிடக்கிறார் என் கணவர். வீட்டைக் கவனிப்பதில்லை, குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. என்னிடம் பேசுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. நள்ளிரவு வரை இணையத்தில் எங்கெங்கோ உலாவிக் கொண்டு சோர்ந்து போய் தூங்கி விடுகிறார். வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. மணவிலக்கு கோரலாமா என யோசிக்கிறேன் என தன்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள்    
September 5, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான எனது கட்டுரை ) அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

கவிதை : மொட்டுக்கு மலர் வளையம்    
September 5, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்

கருக் கலைப்பு மனிதாபிமானச் சிதைவுகளில் நடந்தேறும் படு கொலை. குற்றமில்லாத ஓர் வெள்ளைப்புறாவை வேங்கை வேட்டையாடும் வலி. முளை விடும் வரை விதைகளைத் தூவிவிட்டு தலை கொய்வது தகாத அறுவடையில்லையா ? தொப்புழ்கொடியில் மழலைக்கு தூக்குத் தண்டனையா ? பன்னீர்க் கடலில் பச்சிளம் பாலகர்க்கு கருணைக்கொலையா ? எந்தத் தராசுத் தட்டில் இதை நியாயப் படுத்துகிறீர்கள் ? அனாதைக் குழந்தைகளோடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

கவிதை : ஆனந்தத்தின் இருப்பிடம் அறியாமை    
September 4, 2008, 8:52 am | தலைப்புப் பக்கம்

உன்னிடமிருக்கும் ஆடைகளின் நிறங்களும் வடிவங்களும் எனக்கு அத்துப்படி. எந்த தினங்களில் நீ எந்த ஆடை அணிவாய் என்பதையும் எந்த ஆடைக்கு எந்த காதணி அணிவாய் என்பதையும், எந்தக் காதணிக்கு எந்தக் காலணி அணிவாய் என்பதையும், துல்லியமாய்ச் சொல்லிய காலங்கள் உண்டு. நீண்ட வருடங்களுக்குப் பின் ஆக்ரோஷிக்கும் ஆனந்தத்துடன் உனக்குத் தொலை பேசுகையில். குழந்தை அழுகிறது பிறகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கவிதை : வலியே சுவை    
September 3, 2008, 7:04 am | தலைப்புப் பக்கம்

  உனக்காய் பூ பறிக்கையில் விரலில் தைத்த முள்ளை விலக்க மனமின்றி வைத்திருக்கிறேன். தீயை முத்தமிட்டு சிதறிச் சிரிக்கும் மத்தாப்பு போல முள்ளின் முனையில் முளைக்கும் வலியில் உன்னைப்பற்றிய நினைவுகள் பூச்சொரிகின்றன. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கவிதை : மழலை ஏக்கங்கள்    
September 2, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

தூக்கத்திலும் ஆங்கிலம் உளறும் குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன பிளே ஸ்கூல்கள். கான்வெண்ட் கதவருகே காரிலிருந்து இறங்குகின்றன சீருடைத் தேவதைகள் காத்திருக்கின்றனர் கார் டிரைவர்கள் வீட்டு மதில்களுக்குள் குழந்தைகளை திரும்பக் கொண்டு சேர்க்க. ஜாமங்கள் கடந்தபின் வந்து சேரும் பெற்றோரை வார இறுதி ஐஸ்கிரீம் பார்களில் தான் நிதானமாய்ப் பார்க்கின்றன குழந்தைகள். ஷாப்பிங்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.    
September 1, 2008, 2:13 am | தலைப்புப் பக்கம்

ஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருந்தது. மல்லியப்பு சந்தி எனும் கவிதைத் தொகுப்பின் மூலமாக தமிழ் இலக்கியத்தோடும், தமிழ் ஈழ வரலாற்றோடும் தனக்குள்ள நெருக்கத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் இலக்கியம்

சிகப்புத் திராட்சை சாப்பிடுங்கள், பழச்சாறை ஒதுக்குங்கள்    
September 1, 2008, 1:13 am | தலைப்புப் பக்கம்

சிவப்புத் திராட்சைக்கு இப்போதெல்லாம் சந்தையில் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. விதையில்லாத பச்சை திராட்சை, அல்லது அவசர கோலத்தில் வாங்கப்படும் பழச்சாறுகள் இவையே வீடுகளை நிறைக்கின்றன. அதுவும் ரிலையன்ஸ் பிரஷ் போன்ற மக்களை முட்டாளாக்கும் கடைகளில் வித விதமாய் பழச்சாறு பாட்டில்கள் புதிது புதிதாய் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய பழச்சாறுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

கவிதை : அவளது கண்ணீரில் காதல்    
September 1, 2008, 12:18 am | தலைப்புப் பக்கம்

  பிரியமே, எப்படிச் சாகடிப்பது உன் நினைவுகளின் இராவணத் தலைகளை ? 0 மழை பெய்து முடித்த ஓர் ஈர இரவில், அக்ரகாரத்து ஓரத்தில் அணையாமல் அலையும் அகல்விளக்காய், சுருள் முடிகள் அலைய, வெளிச்சம் விட்டு வெளியேறுகின்றன என் சிந்தனைகள். ரோஜாப் பூவின் கழுத்தை மெல்லமாய் கிள்ளுவதை காணும் போதெல்லாம், சைவக் கிளி ஏன் பூவைக் கொல்கிறது என்பாய், மருதாணித் தளிர்களை உதடுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இதுவல்லவோ கார் !    
August 29, 2008, 12:58 am | தலைப்புப் பக்கம்

“ஸ்பீட் லிமிட்”  அல்லது அதிகபட்ச வேக அளவு என்பது மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் மிகவும் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படும் சாலை விதி. இடைவெளி இருக்குமிடத்திலெல்லாம் வாகனத்தையும், தானிகளையும் நுழைத்துத் திருப்பும் நம்மூர் ஓட்டுனர்கள் பலருக்கும் இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. நம்ம கார், நம்ம ரோட், நம்ம விருப்பமான வேகத்துக்கு ஓட்டலாம் என ஓட்டினால் மேலை நாடுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்

கவிதை : கடவுளும் மனிதனும்    
August 28, 2008, 8:43 am | தலைப்புப் பக்கம்

        கடளாகும் கனவில் மிதந்து கொண்டிருக்கிறான் மனிதன் மனிதனாகி மண்ணில் நடந்து கொண்டிருக்கிறார் கடவுள். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பதின் வயதினருக்கானது ….    
August 28, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்

முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார...தொடர்ந்து படிக்கவும் »

சுப்ரமணியபுரம் எனும் சைக்கோப் படம் !    
August 27, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்

  அளவுக்கு அதிகமாக விமர்சகர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடிய சுப்பிரமணிய புரம் என்னும் படத்தைப் பார்த்தேன். 1980 களை கண்முன்னால் கொண்டு நிறுத்திய ஒரே காரணத்துக்காகப் படத்தைப் பார்க்க வேண்டுமெனில் நான் பேசாமல் ஒரு தலை ராகத்தையோ, இரயில் பயணங்களையோ இன்னொரு முறை பார்த்து விட்டு பேசாமல் போய் விட்டிருப்பேன். அமீர், பாலா இவர்களைப் பின் தொடர்ந்து தமிழுக்குக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கவிதை : தொலை நகரம்    
August 27, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்

இன்னும் கொஞ்ச தூரம் தான் கால்களைக் கொஞ்சம் வலுவாக்கு. அடுத்தவன் கனவுகளுக்குள் படுத்துக் கிடக்கும் உன் பார்வைகளின் சோர்வகற்று. அறுவடைக் காலத்தில் நண்டு பிடிப்பதை விட கதிர் அறுப்பதல்லவா அவசியம், வா, இன்னும் கொஞ்ச தூரம் தான். அதோ தெரிகிறதே ஓர் வெளிச்ச பூமி அங்கு தான் செல்லவேண்டும். பரிச்சயமான பிரதேசமாய் தோன்றுகிறதா ? அது வேறெங்கும் இல்லை உன்னுள் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கவிதை

வியப்பூட்டும் முதல் கணினி    
August 26, 2008, 8:50 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது. இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

e-Waste : உலகை அழிக்கும் மின்னணுக் கழிவு !!!    
August 25, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்

   ( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )   புற்றீசல் போல என்பார்களே அப்படித் தான் இருக்கிறது இன்றைய நவீன உலகில் எலக்ட்ரானிக் பொருட்களின் வளர்ச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கிய கணினி இன்றைக்கு அதரப் பழசு என பெயர் சூட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வாங்கிய கைப்பேசியைக் கைகளில் வைத்திருப்பதே அவமானம் என கருதுகிறது இளைஞர் பட்டாளம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் மனிதம்

குசேலன் – உண்மையிலேயே நல்ல படம்    
August 25, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்

குசேலன் திரைப்படத்தை இத்தனை தாமதமாய் பார்த்ததற்குக் காரணம் நான் இணையத்தில் வாசித்த எதிர் விமர்சனங்கள் தான் காரணம். குசேலன் மகா குப்பை என்றும், இதை விட பத்து பத்து படத்தை பத்து வாட்டி பார்க்கலாம் என்றும் விமர்-ஜனங்கள் சொன்ன பின் படத்தைப் பார்க்க வேண்டுமா என ஓரமாய் ஒதுங்கிவிட்டேன். இந்த வார இறுதியில் தான் “பார்த்தேன் குசேலனை” சமீபகாலமாக எந்தத் தமிழ்ப் படத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எங்கே என்ன சாப்பிடலாம் !    
August 22, 2008, 2:17 am | தலைப்புப் பக்கம்

சே… நார்த் போக வேண்டியிருக்கு. அங்கே போய் எதைச் சாப்பிடறதுன்னே தெரியலையே என தென்நாட்டு வாசிகளும், சவுத் போனா சோறு, சாம்பார் தவிர வேற என்ன இருக்கு என குழம்பும் வட வாசிகளும் இந்த படத்தை கிளிக்கிப் பாருங்கள்.   எந்த ஊருக்குப் போனா, என்ன சாப்பிடலாம் எனும் பட்டியல். சுவாரஸ்யமாய் இருந்ததால் பகிர்கிறேன்.   பின் குறிப்பு : எவ்வளவு சாப்பிடலாம் என்பது உங்கள் வயிறையும், பர்சையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஷுகர்: கண்ணைப் பார்த்தே கண்டறியலாம் !!!    
August 22, 2008, 1:39 am | தலைப்புப் பக்கம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல குடும்பங்கள் தற்போது வீட்டுக்கு ஓரிரு நீரிழிவு நோயாளிகளை வளர்த்து வருகிறது என்பது உலகையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. வெகு சாதாரணமாக எனக்கு ஷுகர் இருக்கு என்று சொல்லித் திரியும் மக்களுக்கு அந்த நோய் குறித்த முழுமையான புரிதல் இருப்பதில்லை. உடலிலுள்ள எல்லா உறுப்புகளையும் சென்று தாக்கி பலமிழக்கச் செய்து, செயலிழக்க வைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கவிதை : புரியவில்லையே அம்மா    
August 22, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்

அம்மா.. வார்த்தைகள் பழகும் வரைக்கும் என் அழுகையை மொழிபெயர்த்து அமுதூட்டுவாய். தொட்டிலின் ஈரம் துடைத்துத் தாலாட்டுவாய். பாவாடைப் பருவத்தில் என் இடுப்பில் புடவை கட்டிவிட்டு உன்வயிற்றில் நெருப்புக் கட்டியிருப்பதாய் சொல்லிச் சிரித்துக் கொண்டாய். ஏனோ எனக்குப் புரியவில்லை. அறிவுக்குள் காரணங்கள் விளங்காத ஒரு மாலைப்பொழுதின் விளையாட்டுத் திடலில் பயந்து அழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

முட்டை ஸ்பெஷல் : அசைவம் அல்ல !!!    
August 21, 2008, 2:27 am | தலைப்புப் பக்கம்

முட்டை கிடைச்சா என்ன செய்வோம் ? வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கிப் போட்டு சூடா ஒரு ஆம்லெட், கொஞ்சமா பெப்பர் தூவி அப்படியே லபக்குவோம்.  சரி அதுக்கு பொறுமையில்லேன்னா, சுடுதண்ணீரில் போட்டு அவித்து  விழுங்குவோம். இல்லேன்னா ஆஃப் பாயில். பயில்வான் பக்கிரிகளெனில் கோழி இறக்கி வைத்த சூட்டோடு சூடாக பச்சையாகவே உடைத்து வாயில் ஊற்றுவார்கள். கிராமத்தில் தவிட்டுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை

தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் !    
August 20, 2008, 6:44 am | தலைப்புப் பக்கம்

தாய்ப்பால் குழந்தைக்கான ஒரு அற்புதமான உணவு என்பதும், அதற்கு இணையான மாற்று உணவு உலகிலேயே இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. குழந்தைக்கு ஒவ்வாமை நோய் வராமல் காக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அதிக அறிவுடன் வளர உதவுகிறது, வைரஸ் பாக்டீரியா தாக்குதலிலிருந்து காக்கிறது என்றெல்லாம் தாய்ப்பாலில் மகத்துவம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

கவிதை : தூரிகையுடன் ஒரு காரிகை    
August 20, 2008, 12:37 am | தலைப்புப் பக்கம்

யாரடி நீ. எப்போதேனும் என் கனவுக் கட்டிலில் வந்தமர்கிறாய். தூரிகை தொட்டெடுத்து முத்தச்சாயம் பூசி என்னை நித்திரைத் தொட்டிலில் விட்டுச் செல்கிறாய். கனவுகளில் பேருந்துகள் நகர்ந்தால் நீ பயணியாகிறாய், நதி நடந்தால் ஈரமாய் ஓர் ஓரமாய் கரையேறுகிறாய். அலுவலகக் கனவுகளில் நீ எப்போதேனும் எட்டிப் பார்த்துச் செல்கிறாய், கடற்கரைக் கனவுகளில் சிலநேரம் மணல் கிளறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஆடையா ? அப்படீன்னா என்ன ?    
August 18, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்

உலகெங்கும் காடுகளை நாகரீக மனிதன் அழித்து வருவதால் பல பழங்குடி இனமே அழியும் அபாயம் இருக்கிறது என கவலை தெரிவிக்கிறார் உலக பழங்குடியினர் பாதுகாப்புக் குழுவான Survival International குழுவின் இயக்குனர் ஸ்டீபன் கோரி.   இதுவரை வெளி உலகத்தோடு சற்றும் தொடர்பே இல்லாத சுமார் நூறு பழங்குடி இனமாவது உலகில் நிச்சயம் உண்டு என அடித்துச் சொல்கிறார் அவர். இவற்றில் பாதி இனம் பிரேசில் மற்றும் பெரு...தொடர்ந்து படிக்கவும் »

கட்டுரை : கடவுளைத் தேடுது விஞ்ஞானம்    
August 18, 2008, 2:50 am | தலைப்புப் பக்கம்

( தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )   விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராய் இருக்கும் மர்மங்கள் உலகில் ஏராளம் ஏராளம். அதில் ஒன்று தான் உலகில் உயிரின் முதல் துகள் உருவான நிகழ்வு. அதை அவர்கள் கடவுளின் துகள் என பெயரிட்டு அழைக்கிறார்கள். எப்படியேனும் அதன் மூலத்தைக் கண்டுபிடித்தே தீர்வது என உலகத்திலுள்ள தலை சிறந்த இயற்பியல் வல்லுனர்கள் தலையைப் பிய்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் மனிதம்

நான் பார்த்ததிலே : The Spiderwick Chronicles    
August 14, 2008, 1:12 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப் படங்களைப் பார்க்கும் பொறுமை என்னிடமிருந்து தனியே கழன்று ஓடிவிட்டது போலிருக்கிறது. ஒரு காலத்தில் எந்தப் படமானாலும் எந்த ஓட்டை தியேட்டரானாலும் ஓடிப் போய் உட்கார்ந்து படத்தின் கடைசி டைட்டில் முடிந்தபிறகு கூட திரையையே உற்றுப் பார்க்கும் சினிமா மோகம் இருந்தது. ரிலீஸ் நாளன்று முதல் காட்சி பார்த்தால் தான் ஏதோ ஜென்ம சாபல்யம் பெற்று விட்டது போல மனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கட்டுரை : பாலை நிலமாகுமா பூகோளம்.    
August 12, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

 இந்த வார தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை தண்ணீர் பிரச்சனை என்றதும் சட்டென நம் நினைவுக்கு காவேரியும், முல்லைப் பெரியாறும், சேது சமுத்திரமும் வரக் கூடும். விவசாயத் தோழர்கள் எனில் சில்லென வயல் நனைக்கும் மழையோ, நகர்ப்புற வாசிகள் எனில் தெருமுனையில் நிற்கும் மாநகர தண்ணீர் தொட்டியோ, எப்போதேனும் வரும் கார்ப்பரேஷன் தண்ணீரோ, தண்ணீர் லாரியோ நினைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

பெண் காவலர்களுக்கான சிறப்பு உள்ளாடை !    
August 7, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

ஜெர்மன் நாட்டுப் பெண் காவலர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பான குண்டு துளைக்காத உள்ளாடைகளை வழங்கியிருக்கிறது காவல் துறை. குண்டு துளைக்காத ஜாக்கெட் அணியும் காவலர்கள் இப்போது கூடவே உள்ளாடையையும் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். போலீஸ் என ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்த உள்ளாடைகள் தான் உலகிலேயே முதல் குண்டு துளைக்காத...தொடர்ந்து படிக்கவும் »

கூட்டுக் குடும்பம் எனும் சுவர்க்கம்    
August 7, 2008, 12:13 am | தலைப்புப் பக்கம்

  குடும்ப உறவுகள் நாளுக்கு நாள் சிதைந்து வரும் சூழல் இது. கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என கேட்கக் கூடிய நிலைக்குத் தள்ளி விட்டது இன்றைய வாழ்க்கை முறை. இத்தகைய சூழலில் வியக்க வைக்கும் விதமாக ஒரே குடும்பத்திலுள்ள 80 பேர் ஒன்றாகக் கூடி இன்பமாகப் பொழுதைச் செலவிட்ட உன்னதமான அனுபவம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது. இங்கிலாந்திலுள்ள டிவான் என்னுமிடத்தில் இங்கிலாந்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

நான் பார்த்ததிலே : ஒரு குறும்பட விமர்சனம்    
August 6, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

  என்று மடியும் எனும் குறும்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு வாய்த்தது. முத்துக்குமார் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தமிழியலன் எனும் மின் துறைப் பொறியாளர் ஒருவர் நடித்துள்ளார். அடக்குமுறையினால் கிராமத்தில் நிலத்தை இழந்த ஒரு தந்தை தனது மகனைக் காண சென்னை வருகிறார். சென்னையில் கால் செண்டர் ஒன்றில் பணிபுரியும் மகன் தந்தையிடம் பேசக் கூட நேரம் இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலகின் மிகச் சிறிய பாம்பு !    
August 4, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

யூ.எஸ் குவார்டர் நாணயத்தின் மேல் ஒய்யாரமாகப் போஸ்கொடுத்துக் கொண்டிருப்பது உலகின் மிகச் சிறிய பாம்பு. பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனும் பழமொழி இதனிடம் பலிக்காது போல. கரீபியன் தீவு பார்படாசில் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு மண் புழுவைப் போல கிடந்த இந்த உயிரினம் பாம்பு என கண்டறியப்பட்டதே ஒரு வியப்புக்குரிய செய்தி என்பதில் மாற்றுக் கருத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நீங்க சுறுசுறுப்பான பார்ட்டியா ?    
August 4, 2008, 4:41 am | தலைப்புப் பக்கம்

  சுறுசுறுப்பாய் இருப்பவர்களுக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவர்களுக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட மிகவும் விரிவான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 80,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக உடற்பயிற்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையேயான தொடர்பையே  ஆய்வுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்    
August 4, 2008, 3:57 am | தலைப்புப் பக்கம்

  ( World Breastfeeding Week Special ) தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு கவிதை

பாட்டி கேட்டா சிரிப்பாங்க …    
July 31, 2008, 7:48 am | தலைப்புப் பக்கம்

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர். அதாவது நமது வாயிலுள்ள உமிழ் நீருக்குக் காயங்களை ஆற்றும் சக்தி இருக்கிறது என்பதே அது. இதைத் தெரிந்து கொள்ள நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வரை போகவேண்டிய அவசியம் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். காரணம் இயல்பிலேயே மருத்துவத்தில் மகத்துவம் வாய்ந்த நமது பாட்டிகள், தாத்தாக்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கி.மு : யோசேப்பு - ஒரு அடிமையின் கதை !    
July 31, 2008, 4:37 am | தலைப்புப் பக்கம்

  யோசேப்பு யாக்கோபின் பிரிய மகன். யாக்கோபிற்கு பல மனைவிகள் மூலம் மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகள். யோசேப்பும், பென்யமினும் அவருடைய பிரிய மனைவி ராகேலின் பிள்ளைகள். யோசேப்பின் மீது தந்தை யாக்கோபுக்கு அளவு கடந்த பாசம். அவர் யோசேப்பை மிகவும் செல்லமாய்க் கவனித்து வந்தார். அவனு க்காக தனியாக ஒரு அழகிய அங்கியையும் தன் கைப்பட செய்து கொடுத்தார். அதனால் யோசேப்பின் சகோதரர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கவிதை : அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்    
July 30, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்

கருப்புப் போர்வைக்குள் குளிர் உறங்கும் இரவு. அமெரிக்காவின் அகன்ற சாலைகளெங்கும் கால் வலியுடன் விழுந்து கிடக்கிறது கனத்த காற்று. ஜன்னல் திறந்தால் பாய்ந்து விடலாமென்று குத்தூசிகளுடன் காத்திருக்கிறது குளிர். செயற்கைச் சூரியனை குழாய்களில் செலுத்தும் வீடுகள். விரல்கள் அனிச்சைச் செயலாய் நடுங்க. பல் வரிசை இரண்டும் காலாட்படை போல நேருக்கு நேர் மோதிக் கொள்ள. நாக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அறிவியல் புனைக் கதை : உண்மையா அது என்ன ?    
July 28, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

இன்று தனக்கு முன்னால் கூடியிருந்த பதினேழு விஞ்ஞானிகளின் முன்னிலையில் தனது கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கத் துவங்கினார் வர்மா. இந்தக் கருவி ஆராய்ச்சியாளர்களுக்காகவே கண்டுபிடிக்கப் பட்ட கருவி. வரலாறுகளைத் துருவித் திரிபவர்களுக்கு இந்தக் கருவி ஒரு கடவுள் என்று கூட சொல்லலாம். உதாரணமாக அகழ்வாராய்ச்சி போன்றவற்றில் கிடைக்கும் ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கவிதை : வாழ்வின் மகத்துவம்    
July 28, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்

அடுத்தவர் வாழ்க்கை அமைதியாய் கழிவதாகக் கருதிக் கொள்கிறது ஒவ்வொருவர் வாழ்க்கையும். ஒப்பீடுகளின் உரசல்களால் எரிந்து கொண்டிருக்கின்றன உறவுகளின் காப்பீடுகள். அழுகையையும் இயலாமையையும் புதைக்க எல்லோரும் தேடுகின்றனர் சதுர அடிகளில் சில அறைகள். திரைச் சீலைகளும் தாழிட்ட சன்னல்களும் மம்மிகளை உள்ளுக்குள் நிறைத்து பூங்காக்களை வாசல் வழியே அனுப்பிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அறிவியல் புனைக் கதை : நவீனன்    
July 25, 2008, 6:46 am | தலைப்புப் பக்கம்

அசோக் நகர் காவல் நிலையம் : சென்னை மாலை 6 மணி. “யோவ்.. இந்த சைக்கோ எவன்யா ? பொழுது சாஞ்சாலே மனுஷனுக்கு மண்டை காஞ்சு போயிடுது. அவன் மட்டும் என் கைல கிடச்சான்.. மவனே … “ கோபத்தையெல்லாம் உள்ளுக்குள் எரிமலையாய் வழியவிட்டுக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கனகராஜ். கடந்த சில மாதங்களாகவே சென்னையில் நள்ளிரவிலோ அதிகாலையிலோ மர்மமாய் வாட்ச்மேன்கள் படுகொலை செய்யப்படுவதும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கவிதை : ஒரு நண்பனுக்கு…    
July 24, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்

உனக்கு நான் அனுப்பிய கண்ணீர்த் துளிகளை உப்புத் தயாரிக்க நீ உபயோகித்துக் கொண்டாய். இருட்டில் நடந்துகொண்டே உன் நிழல் களவாடப்பட்டதாய் புலம்புகிறாய் பாறைகளில் பாதம் பதித்துவிட்டு சுவடு தேடி சுற்றிவருகிறாய். நீ பறக்கவிடும் பட்டத்தின் நூலறுந்ததை மறந்துவிட்டு வாலறுந்ததற்காய் வருந்துகிறாய். முதுமக்கள் தாழிக்குள் மூச்சடக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மனசைத் தொட்ட விளம்பரம்    
July 18, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்

I can’t follow you everywhere…” “Avoid using mobile while driving…” ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

வரும் வழியில் - 2    
July 9, 2008, 2:09 am | தலைப்புப் பக்கம்

காட்சி 1 : வேளச்சேரி திரௌபதி அம்மன் கோயில் தெரு வழியாக காரை படகு போல ஆடி ஆடி ஓட்டிக்கொண்டு வரும்போதெல்லாம் காண முடியும் அரசு பள்ளி ஒன்றின் முன்னால் குவிந்து கிடக்கும் சீருடை மாணாக்கரை. சாலையை முழுவதுமாக அடைத்துக் கொண்டும், முதுகில் மூட்டையைச் சுமந்து கொண்டும் நெடுநேரம் மாணாக்கர்கள் காத்திருந்தாலும் ஏதோ தியேட்டர் போல சரியா ஒன்பது மணி தாண்டிய பிறகு தான் கேட்டையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கவிதை : விதைக்குள் ஒளிந்தவை    
July 7, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்

ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்தாலும் என் குரல் கேட்பாய் என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்  யாரேனும் சொல்லியிருந்தால் அவனுக்குப் பைத்தியக்காரப் பட்டம் கிடைத்திருக்கும். எங்கே இருந்தாலும் பார்த்துக் கொண்டே பேசலாம் என கடந்த நூற்றாண்டின் முதல் படியில் யாரேனும் முனகியிருந்தால், மனநிலை மருத்துவமனை அவனை அனுமதித்திருக்கும். பூமிக்கு வெளியே போய் பூமியை படமெடுப்பேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: