பச்சை + வெள்ளை = ?
ஆக்கம்: துளசி கோபால் | October 19, 2008, 12:25 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: துளசி கோபால் | October 19, 2008, 12:25 am | தலைப்புப் பக்கம்
ப்ரொக்கலிக்கும் காலி ஃப்ளவருக்கும் கல்யாணம்'வாளைமீனுக்கும்....' ராகத்தில் பாடிப்பாருங்க. சரியா வருதா?ஆச்சு கல்யாணம். அப்புறம் குழந்தை குட்டிங்கதானே? அப்படிப் பொறந்ததுதான் இந்த ப்ரொக்கோ ஃப்ளவர்.(Brocco flower) அப்படியே காலியை உரிச்சுவச்சமாதிரி வடிவம். ப்ரொக்கி ஜாடையில்(வண்ணத்தில்) அழுத்தமா இல்லாம, வெள்ளையுடன் ஒரு தீற்றல் கலந்த பச்சையா ஒரு பொ(பு)து நிறம். சிநேகாக் கலர்ன்னு இப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்
ஆக்கம்: மாதேவி | October 15, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மாதேவி | October 15, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்
கத்தரிவெள்ளையாகமாறுமா?மாறும்!வெள்ளையாக மட்டுமென்னசெம்மையாக, மஞ்சளாக .. இன்னும் இன்னும்கத்தரி வாழையுடன் கூட்டிணைந்துதேங்காய்ப் பாலில் முக்குளித்து,தேசியுடன் கலக்கும் போதுவாசனை கமழும், வாயூறும்அக்கம் பக்கமும்பொட்டுக்குள்ளால்எட்டிப் பாரக்கும்.ஊர்க் கத்தரியானால்ஊரே கூடும்.சுவைப்போமா?தேங்காய்ப் பால் கத்தரிதேவையான பொருட்கள்1. பிஞ்சுக் கத்தரிக்காய் - 22. ...தொடர்ந்து படிக்கவும் »
ஃபிஷ் ஃப்ரை பிரியர்களுக்கு - சைவம்
ஆக்கம்: இம்சை அரசி | October 15, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: இம்சை அரசி | October 15, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்
நீங்க நான் வெஜ் பார்ட்டியா? இல்ல ப்யூர் வெஜிடேரியனா? இல்ல ரெண்டுமே சாப்பிடறவங்களா? அப்ப மேல படிங்க... ஹி... ஹி... இதை தவிர வேற கேட்டகிரியே இல்லைனு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது. நமக்கு எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க நல்லா வரும். அதைதான் பண்றேன். சரி சரி... கமிங் டு த பாயிண்ட்... ஃபிஷ் ஃப்ரை மாதிரியே வெஜிடேரியன்ல எப்படி பண்றதுனு என் ஆபிஸ்ல வேல செய்யற...தொடர்ந்து படிக்கவும் »
சாலட்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 13, 2008, 3:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 13, 2008, 3:08 am | தலைப்புப் பக்கம்
தமிழ் சமையல் வலைப்பூ திரட்டிவாரத்திட்டம்:5ற்காக எனது பதிவு.பழங்கள் சாலட் செய்தால் எனக்கு மிகவும்பிடிக்கும். ஆனால் இந்த கஸ்டர் பவுடரைகரைத்து சேர்ப்பது எனக்கு பிடிக்காது. :(நான் செய்யும் சாலடிற்கான ரெசிப்பி இதுதான்.உங்களுக்கு விருப்பமான பழங்கள்(ஆப்பிள்-2, வாழைப்பழம் 2, பப்பாளி-1 ,அன்னாசி -1, திராட்சை-100கி.ம் போன்றவை)இவைகளில் திராட்சை தவிர மற்றபழங்களை கழுவி சதுரமாக நறுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
இன்று சமையல்கட்டில் "Cool as a Cucumber"
ஆக்கம்: Thooya | October 8, 2008, 8:12 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | October 8, 2008, 8:12 pm | தலைப்புப் பக்கம்
ஊருக்கு சென்றால் மாங்காய், நெல்லிக்காய், புளியங்காய், விளாங்காய் என மிளகாய்தூள்+ உப்புடன் சாப்பிட்டதற்கு; ஒஸ்திரேலியா திரும்பினால் பெரும் சோதனையாக இருக்கும். மாங்காய் மட்டும் சில மாதங்களில் கிடைக்கும். மற்றவை மருந்திற்கும் பார்த்ததில்லை. ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படுவமா நாங்க? இவற்றிற்கான மாற்றாக Cucumber, Apple, Celary, Carrot, Orange ஆகியவற்றை உண்பதுண்டு. இவை உணவில் சாதாரணமாக...தொடர்ந்து படிக்கவும் »
உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை
ஆக்கம்: புருனோ Bruno | October 8, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புருனோ Bruno | October 8, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்
ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது.
கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை
அவ்வாறு சோதனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
கேழ்வரகு அடை & புட்டு
ஆக்கம்: கவிதா கெஜானனன் | October 3, 2008, 3:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கவிதா கெஜானனன் | October 3, 2008, 3:02 am | தலைப்புப் பக்கம்
கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள் அதில் களி'யை தவிர எனக்கு மற்றவை பிடிக்கும். அதில் கேழ்வரகு அடை எனக்கு மிகவும் பிடிக்கும். முக்கிய காரணம் முருங்கைகீரையை அதில் சேர்ப்பார்கள். இப்போதும் எல்லோரும் வீடுகளில் இந்த அடையை செய்கிறார்களா என்று தெரியவில்லை. முயற்சி செய்யுங்கள் very very delicious healthy food!! தேவையான பொருட்கள்...தொடர்ந்து படிக்கவும் »
உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை
ஆக்கம்: புருனோ Bruno | October 2, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புருனோ Bruno | October 2, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்
ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது.
கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை
அவ்வாறு சோதனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
லெமாங் - ஆஹா என்ன ருசி!
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | September 30, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | September 30, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்
மலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.லெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
சன்னா பட்டூரா
ஆக்கம்: கவிதா|Kavitha | September 29, 2008, 7:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கவிதா|Kavitha | September 29, 2008, 7:53 am | தலைப்புப் பக்கம்
நம்மில் நிறைய பேர் ஹோட்டலுக்கு சென்றால் விரும்பி சாப்பிடுவது சன்னா பட்டூரா... அதை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே...சன்னாமசாலா செய்ய தேவையான பொருட்கள்:-வெள்ளை கடலை - 1 கப்வெங்காயம் : 2 தக்காளி - 3பச்சைமிளகாய் : 1மிளகாய் + தனியா தூள் - 1.5 ஸ்பூன்மஞ்சள் பொடி: சிறுதுபூண்டு : 5 பல்இஞ்சி - சிறு துண்டுபட்டை, லவங்கம் : 2, 2சோம்பு : சின்ன ஸ்பூன்பட்டை இலை - சிறிய துண்டுஎண்ணெய் :...தொடர்ந்து படிக்கவும் »
முட்டை தொக்கு:
ஆக்கம்: Jil Jil | September 14, 2008, 9:47 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jil Jil | September 14, 2008, 9:47 pm | தலைப்புப் பக்கம்
தேவையான பொருட்கள்:முட்டை - 2 எண்ணம்வெங்காயம் - 1தக்காளி - 1 பூண்டு - 2 பல் இஞ்சி - சிறிய துண்டு மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் தனியா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மல்லித் தழை - சிறிது உப்பு - தேவைக்கு எண்ணெய் - தேவைக்கு கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை :முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்....தொடர்ந்து படிக்கவும் »
பால்கோவா - AMC cookware-ல் சமையல் குறிப்பு
ஆக்கம்: நானானி | September 4, 2008, 3:41 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நானானி | September 4, 2008, 3:41 am | தலைப்புப் பக்கம்
AMC- சமையல் பாத்திரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.'இது ஒரு ஜெர்மன் தயாரிப்பு. சர்ஜிகல்மெட்டல், அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகத்தாலானது.விரைவாக சூடேறும். அதே நேரம் சமையல் எண்ணையும் எரிவாயுவும் குறைவாக செலவாகும்.என்ணையில்லா சமையலுக்கு ஏதுவானது.' இப்படியெல்லாம் வாசல் கதவைத்தட்டி, டைகட்டியஸேல்ஸ் பர்சன் ஒருவர் வந்து விரிவுரை ஆற்றி கவிழாத ரங்கமணியையும்...தொடர்ந்து படிக்கவும் »
எலுமிச்சையின் பலன்கள்
ஆக்கம்: Thooya | September 2, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | September 2, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்
*படத்தை...தொடர்ந்து படிக்கவும் »
சிகப்புத் திராட்சை சாப்பிடுங்கள், பழச்சாறை ஒதுக்குங்கள்
ஆக்கம்: சேவியர் | September 1, 2008, 1:13 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 1, 2008, 1:13 am | தலைப்புப் பக்கம்
சிவப்புத் திராட்சைக்கு இப்போதெல்லாம் சந்தையில் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. விதையில்லாத பச்சை திராட்சை, அல்லது அவசர கோலத்தில் வாங்கப்படும் பழச்சாறுகள் இவையே வீடுகளை நிறைக்கின்றன. அதுவும் ரிலையன்ஸ் பிரஷ் போன்ற மக்களை முட்டாளாக்கும் கடைகளில் வித விதமாய் பழச்சாறு பாட்டில்கள் புதிது புதிதாய் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய பழச்சாறுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
நல்வாழ்வுக்கான உணவு கூம்பகம்/பிரமிட்
ஆக்கம்: Thooya | August 31, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | August 31, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்
இது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ்வதற்கு எவ்வாறு தனது உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கான அமைப்பாகும். முக்கோண வடிவிலான அமைப்பில் உள்ளெடுக்கப்படவேண்டிய உணவுகள் பற்றி இப்படம் எளிமையாக விளக்குகிறது.கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும் அண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
நீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்!
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 29, 2008, 4:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 29, 2008, 4:10 am | தலைப்புப் பக்கம்
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருபவர். சுற்றுச்சூழல் போராளி. ஏன் வேண்டும் இயற்கை விவசாயம் என்பது குறித்து அவர் எழுதிய கட்டுரை இதோ:கண்களை விற்றா சித்திரம் வாங்குவது?ஒரு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள்...தொடர்ந்து படிக்கவும் »
ரசமாலை ஒரு வித மாலையோ?
ஆக்கம்: Thooya | August 28, 2008, 7:22 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | August 28, 2008, 7:22 pm | தலைப்புப் பக்கம்
அப்படித்தான் முதன் முதல் கேள்விப்பட்ட போது எனக்கு தோன்றியது. உங்களில் எத்தனை பேருக்கு இந்த இனிப்பு பற்றி தெரிந்திருக்கும் என தெரியவில்லை. இது இந்திய இனிப்பு என்பதால் தமிழ்நாட்டு உறவுகள் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஈழத்து உறவுகளுக்கு? இறுதியாக அறிந்து கொண்டது நானாக கூட இருக்கலாம். தற்போதைய பிரச்சனை அது அல்ல. பெயரே சரியாக தெரியாத இனிப்பை நான் செய்தது தான்...தொடர்ந்து படிக்கவும் »
யுவர் அட்டேன்ஷன் ப்ளீஸ்! உங்களுக்கு சர்க்கரை வியாதியா?
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 28, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 28, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்
என் அருமை இனிப்புப் பிரியர்களே,இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார்...தொடர்ந்து படிக்கவும் »
சமையல்கட்டில் ஆயில்யன்
ஆக்கம்: Thooya | August 27, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | August 27, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்
தினந்தோறும் சமையல் என்பது டென்ஷனா விசயம்தான் என்பது இங்கு வந்த பிறகு அல்ல இங்கு வந்து சமைக்க தொடங்கிய பிறகே புரிந்துக்கொண்டேன்!என்ன சமையல் செய்யணும்ன்னு யோசிச்சு,அதுக்கு என்ன சமையல் பொருட்கள் வேணும்ன்னு கண்டுபிடிச்சு அப்புறம் அதையெல்லாம் எப்படி பக்குவமா சேர்த்து சமைக்கணும்ங்கறவிசயங்களெல்லாம் பயங்கரமான அவஸ்தை! ரிசல்ட் நாம நினைச்சதை விட ஓரளவுக்கு சரியாக...தொடர்ந்து படிக்கவும் »
ரெட் ராஸ்கல்ஸ்
ஆக்கம்: துளசி கோபால் | August 26, 2008, 4:15 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: துளசி கோபால் | August 26, 2008, 4:15 pm | தலைப்புப் பக்கம்
இவனுங்களை என்ன பண்ணினாத் தகும்? அப்படியே கொதிக்கும் வெந்நீரில் போட்டுத் தோலை உரிக்கலாமா? இல்லே பேசாமக் கூர்மையான கத்தியை வச்சுத் துண்டுதுண்டா நறுக்கலாமா? எப்படின்னாலும் நறுக்குனதுகளைத் தூக்கிப்போட முடியுமா? வேகவச்சுக் கறிபண்ணித் தின்னத்தானே வேணும்?விருந்துச் சமையலோ இல்லை வெறும் ஞாயித்துக்கிழமைக்கான ஸ்பெஷலோ... அப்படி இல்லைன்னாலும் தினப்படிச் சமையலை ருசியாக்க...தொடர்ந்து படிக்கவும் »
மாங்காய் + உப்பு + மிளகாய்தூள்
ஆக்கம்: Thooya | August 26, 2008, 5:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | August 26, 2008, 5:59 am | தலைப்புப் பக்கம்
என்ன ஒரு சுவையான உணவு!!! இப்ப சாப்பிட்டு கொண்டே தான் இந்த பதிவு எழுதுறேன். ஊருக்கு சென்ற போது உருப்படியாக நான் பழகி கொண்ட ஒரே ஒரு பழக்கம் இது தான். (கிகிகி) ஊரில் என்றால் அண்ணாக்களோடு சேர்ந்து மரங்களில் ஏறியே சாப்பிட்டுள்ளேன். (எனக்கு ஏற தெரியாது என்பது உண்மை தான். ஒத்துக்கிறேன். ஆனால் அண்ணன்கள் இருந்தால் மலையேறலாமோ தெரியாது. ஆனால் நிச்சயம் மாமரம் ஏறலாம்) இப்படி தான் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
அடிச்சு சொல்றேன்! நீங்க சுத்த சைவம் கிடையாது!
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 26, 2008, 3:28 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 26, 2008, 3:28 am | தலைப்புப் பக்கம்
நான் சுத்த சைவம். காரணம், நான் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறேன் என்று நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?அடிச்சுச் சொல்றேன், நீங்க சுத்த சைவம் கிடையவே கிடையாது. பயோடெக்னாலஜி கைங்கரியத்தினால் ஜீன் இடமாற்றத் தொழில்நுட்பம் விவசாயத் துறையில் வந்தபிறகு சைவ வஸ்துக்களில் பல அசைவ வஸ்துக்கள் சேர்ந்துவிட்டன. சுத்த சைவம் என்கிற பெயரில் நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
மரவள்ளிக் கிழங்கு மசியல்
ஆக்கம்: Jil Jil | August 22, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jil Jil | August 22, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்
மரவள்ளிக் கிழங்கு நமது நாட்டில் விளையும் கிழங்குகளில் ஓன்று. இந்த மரவள்ளிக் கிழங்குகளிலே பல்வேறு வகை இருக்கின்றதாகக் கேள்விப்பட்டிருகிறேன். எனக்குத் தெரிந்த ஒரே மரவள்ளிக் கிழங்குவகை நூறுமுட்டன் மட்டுமே. நூறுமுட்டன் மரவள்ளிக் கிழங்கு எளிதாக வேகும் தன்மை கொண்டது. அதனால் தானோ என்னவோ எங்கள் ஊர் பக்கங்களில் நூறுமுட்டன் மரவள்ளிக் கிழங்கு வகைகளையே பெரும்பான்மையோர்...தொடர்ந்து படிக்கவும் »
எனக்குப் பிடிச்ச சொதி.
ஆக்கம்: நானானி | August 22, 2008, 12:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நானானி | August 22, 2008, 12:32 am | தலைப்புப் பக்கம்
நெல்லைச்சீமைக்கு விருந்துக்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக ஒன்று கூட்டாஞ்சோறுஅல்லது இந்த சொதியை மணக்க மணக்க பரிமாறி திணறடித்துவிடுவார்கள். குறிப்பாக திருமணம் முடிந்த மறுநாள் மத்தியானச் சாப்பாடு 'சொதி சாப்பாடாகத்தானிருக்கும்'.இப்போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டு, மறுவீட்டு சாப்பாடாக போட்டுவிடுவார்கள். முன்போல் மறுவீடு என்று மாப்பிள்ளை வீட்டில் பெண் வீட்டாரை அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
ரவீஸ் ஊறுகாய் -ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 21, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 21, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்
பள்ளிவிடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும்போதுபொழுது போகாமல் பசி எடுக்கும்!!?!!. சிறுதிண்டிகள்தடா போடப்பட்டிருக்கும். ”பசிச்சா சோறு சாப்பிடு” அப்படின்னு பாட்டி சொல்லிடுவாங்க.தயிர் சோறு வித் ஊறுகாய் ஹாட் ஃபேவரிட்.அதுவும் ரவீஸ் ஊறுகாய் என்றால் போதும்.இலையில் பொட்டலம் மாதிரி மடிக்கப்பட்டிருக்கும்.மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஆகிய வெரைட்டீக்கள்(!!!)கிடைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
நரி தூக்கிட்டு போன உளுந்து வடை
ஆக்கம்: Thooya | August 20, 2008, 10:37 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | August 20, 2008, 10:37 pm | தலைப்புப் பக்கம்
எம்மில் சின்ன வயதில் இந்த கதையை கேட்காதவர்கள் இருப்பார்கள் என எனக்கு தோன்றவில்லை. அத்தனை பிரபலம். அதிலும் வீட்டில் எனக்கு இந்த கதையை சொன்ன போது, "நரி ஏன் காக்காவை பாட சொல்லி கேட்குது, கீழ இருந்து ஒரு துவக்கால சுட வேண்டியது தானே" என கூறி காகங்களின் முழு சாபத்திற்கும் ஆளகியிருக்கேன். அதை வைத்து இன்று வரை என்னை கலாய்ப்போர் எண்ணிக்கையும் குறையவேயில்லை. உளுந்துவடை...தொடர்ந்து படிக்கவும் »
காலிஃப்ளவர் மிளகு பொரியல்
ஆக்கம்: சித்ரா | August 19, 2008, 2:25 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சித்ரா | August 19, 2008, 2:25 am | தலைப்புப் பக்கம்
தேவையான பொருள்கள் : கத்தரிக்காய் பிஞ்சாக 1/4 கிலோ, எண்ணெய் 50 கிராம், உப்பு - கொஞ்சம். வறுத்து அரைக்க : கடலைப்பருப்பு - 2 ஸ்பூன், மல்லி[ தனியா ] - 2 ஸ்பூன், வர மிளகாய் - 6 [அ] 8 வெந்தயம் - கொஞ்சம், கட்டி பெருங்காயம் - சிறியதாக, உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன் துறுவிய தேங்காய் - 1/4 கப் கொஞ்சம் கல் உப்பு .செய்முறை : கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மேலே கூறி உள்ள பொருட்களை...தொடர்ந்து படிக்கவும் »
தக்காளியோதரை.....சமையல் குறிப்பு.
ஆக்கம்: நானானி | August 18, 2008, 8:05 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நானானி | August 18, 2008, 8:05 pm | தலைப்புப் பக்கம்
அதென்ன? புளியில் செய்தால் அது புளியோதரை!! அதுவே தக்காளியில் செய்தால், அதுதக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே?நேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ?' என்று பாடியவாறே நுழைந்தேன்.என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று.ஆஹா! கண்ணா அடிக்கிறே..இன்று நீ கைமாதான். உடனே கோடவுனிலிருந்து குதித்தது ஐடியா ஒன்று....தொடர்ந்து படிக்கவும் »
கள் + கப்பா + மீன்கறி
ஆக்கம்: Thooya | August 14, 2008, 5:42 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | August 14, 2008, 5:42 am | தலைப்புப் பக்கம்
எங்க ஊரில் மரவள்ளிகிழங்கை அவித்து, அதில் தேங்காய் பூ, செத்தல், கறிவேப்பிலை, உள்ளி போட்டு உரலில் இடித்து எடுப்பார்கள். அதன் சுவையை விஞ்ச வானுலகத்தில் கூட ஒரு அமிர்தம் கிடையாது. என்ன இந்த அமிர்தம் பயங்கரமான உறைப்பாக இருக்கும். கண்ணில் நீர் வரும் வரை செய்துவிடும் சக்தி இதற்குண்டு. அதிலும் தோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட (திருடப்பட்டால் இன்னும் சிறப்பு என என் அண்ணன்...தொடர்ந்து படிக்கவும் »
கொத்து பரோட்டா. இல்லை இல்லை கொத்து சப்பாத்தி செய்வது எப்படி?
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 12, 2008, 9:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 12, 2008, 9:51 am | தலைப்புப் பக்கம்
நான் கொத்து பரோட்டா செய்வது எப்படின்னு பதிவுபோடுவதில்லை. கொத்து சப்பாத்தி செய்வது எப்படின்னு தான் பதிவு போடப்போறேன்.தேவையான பொருட்கள்:சப்பாத்தி - 3(நீங்க செஞ்சாலும் சரி, கடையில்வாங்கிக் கிட்டாலும் சரி)வெங்காயம்- 1 பொடியா நறுக்கியதுதக்காளி - 1 பொடியாக நறுக்கியது.கறிவேப்பிலை, கடுகு, தாளிக்க எண்ணைய்.உப்பு, பச்சை மிளகாய் - 1தேங்காயப் பால் கட்டிப்பால் 1/4...தொடர்ந்து படிக்கவும் »
மாமி மெஸ் (ஒரிஜினல்)
ஆக்கம்: லக்கிலுக் | August 12, 2008, 2:07 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | August 12, 2008, 2:07 am | தலைப்புப் பக்கம்
நேற்றைய கூட்டாஞ்சோறு பதிவினை போட்டாலும் போட்டேன், என்னுடைய கைப்பேசி இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவ்வையார் பாளையம் சஞ்சீவிபாரதி, அயன்புரம் சத்யநாராயணன் தவிர்த்து எல்லாருமே பேசினார்கள். ஒரிஜினல் மாமி மெஸ் எங்கிருக்கிறது? அதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்று ஒரே கரைச்சல்.மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் இருந்து வலதுபக்கமாக திரும்பினால் பாரதிய வித்யா பவன் வரும்....தொடர்ந்து படிக்கவும் »
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன்டா
ஆக்கம்: Thooya | August 9, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | August 9, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்
போன்டா என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றுண்டி. இந்த வசனத்தை எப்படி இத்தனை உறுதியாக சொல்கின்றேன் என கேட்பவர்களுக்காக:1. சின்ன வயதில் பள்ளியில் போன்டா சாப்பிடாதவர்கள் உண்டோ (குறிப்பாக ஆண்கள்). அதிலும் வகுப்பு வேலையில் போய் வாங்க, அதை ஒரு ஆசிரியர் பார்க்க. அப்புறம் என்ன, கன்னத்துக்கு வெளியிலும் போன்டா, உள்ளும் போன்டா.2. ஏன் சொல்கின்றார்கள் என்றே...தொடர்ந்து படிக்கவும் »
தவல அடை
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 9, 2008, 4:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 9, 2008, 4:32 am | தலைப்புப் பக்கம்
பேரைப் பார்த்து பயந்து விடாதீர்கள். இது சைவ உணவுதான்.வைகை எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்யும் பொழுது விற்றுக்கொண்டு வருவார்களே சாப்பிட்டிருக்கிறீர்களா?மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த டிபன் சூப்பரா இருக்கும்.இதை இரண்டு விதமாக செய்யலாம்.INGREDIENTS தேவையான பொருட்கள்:அரிசி : 2 கப்கடலைப்பருப்பு, துவரம்பருப்பு,உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு எல்லாம் கலந்து :2 கப்சீரகம், மிளகு 1 ஸ்பூன்....தொடர்ந்து படிக்கவும் »
சாக்லேட் பர்பி
ஆக்கம்: rathidevi | August 5, 2008, 11:56 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: rathidevi | August 5, 2008, 11:56 am | தலைப்புப் பக்கம்
பர்பி மிகவும் ருசியாக இருக்கும். சீக்கிரமும் செய்து முடித்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருள்கள்:-
கோகோ பவுடர் - 1/2கப்
சாக்லேட் பவுடர் - 1/2கப்
சர்க்கரையில்லாத கோவா - 1கப்
தேங்காய் - 1/2கப் துருவியது
சர்க்கரை - 1கப் பொடித்தது
நெய் - தேவையான அளவு
செய்முறை :-
வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவலை சிறிது நேரம் வதக்கி...தொடர்ந்து படிக்கவும் »
நேத்து வச்ச கேரள மீன் குழம்பு
ஆக்கம்: Thooya | August 1, 2008, 4:34 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | August 1, 2008, 4:34 am | தலைப்புப் பக்கம்
பழைய சாதமும் பழைய மீன் குழம்பும் சாப்பிடுற சுகம் வேறு எதற்கு வரும் என்ற வரிகள் அடிக்கடி என் காதில் விழும். அட அப்படி அதில் என்ன தான் இருக்கு என முயற்சித்து பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது, சுவையோ சுவைதான் போங்க. (இருக்காத பின்ன, மீனை வெட்டி,சுத்தம் பண்ணுறது நாங்க தானே என வீட்டில் மாமா முணுமுணுப்பதையெல்லாம் சொல்லிட்டா இருக்க முடியும்)என்னுடைய நெடுநாள் வலைப்பூ நண்பர்...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு NRI க்கு அன்னையின் கடிதம்
ஆக்கம்: kanchana Radhakrishnan | July 31, 2008, 8:05 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: kanchana Radhakrishnan | July 31, 2008, 8:05 pm | தலைப்புப் பக்கம்
அமெரிக்காவில் மேல் படிப்புக்கு சென்று ...அங்கேயே வேலையும் கிடைத்து தங்கியிருக்கும் தன் மகன்/மகளுக்குஒரு அன்னையின் கடிதம்.அன்பு மகனுக்கு/மகளுக்குஅம்மா அனேக ஆசிர்வாதத்துடன் எழுதிக்கொண்டதுஇந்த காலத்துக் குழந்தையான உனக்கு அம்மா நான் சொல்லித் தெரிய வேண்டியது எதுவுமில்லை.உன் வயதில்எங்களுக்கு தெரிந்த விஷயங்களை விட அதிகமாக உனக்கு இன்று தெரியும்.நாற்பது,ஐம்பது...தொடர்ந்து படிக்கவும் »
நீங்க சுத்தமான சமையல்காரரா? எப்படி அறிவது?
ஆக்கம்: Thooya | July 31, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | July 31, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்
படம்வீட்டில் உள்ளவர்களையும், பதிவுகலகத்தில் உள்ளவர்களையும் பயப்படுத்த என்றே பல செய்முறைகளை தொடர்ந்து சமைத்து, வலைப்பூவில் எழுதி வருகின்றேன் என்பது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை. எப்பவும் செய்முறையே போட்டால் சுவாரசியமாக இருக்காதே. ஒரு மாற்றத்திற்கு உங்களை வேறு சில வழிகளிலும் பயப்படுத்தலாம் என யோசித்திருக்கின்றேன். அதன் முதல் படியாக, நீங்கள் சுத்தமான...தொடர்ந்து படிக்கவும் »
கமகம கத்தரிக்காய்
ஆக்கம்: ✪சிந்தாநதி | July 30, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ✪சிந்தாநதி | July 30, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்
தமிழ் உணவுக்கே உரியதான ஒரு சில காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. சாம்பாரில் முக்கிய இடம்பெறுவது மட்டுல்லாமல் அவியல்,பொரியலுக்கும் ஏற்றது. கத்தரிக்காய் கொண்டு செய்யப்படும் சில உணவுவகைகள்...கத்தரிக்காய் சட்னிகத்தரிக்காய் - 2 பெரியதுபச்சை மிளகாய் - 6கொத்துமல்லி தழை- 1 கொத்துபுளி - 1 எலுமிச்சை அளவுபெருங்காயம் - 1 சிட்டிகைஉப்புதாளிதம்:எண்ணெய், கடுகு, வற்றல்1.கத்தரிக்காயை...தொடர்ந்து படிக்கவும் »
அவல் ரெசிப்பி.
ஆக்கம்: புதுகைத் தென்றல் | July 29, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | July 29, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்
கார்மேக வண்ணன் கண்ணனுக்கு பிடித்தது.கிருஷ்ணாஷ்டமிக்கு எது செய்தாலும் செய்யாவிட்டாலும்,இது கண்டிப்பாய் இடம்பெரும் நைவேத்தியம்.நம் உடம்புக்கும் நல்லது. டயட்டில் இருப்பவர்கள்கூட சாப்பிடலாம்.எப்பவும் போல் தேங்காய் அவல், தயிர் அவல், புளிஅவல்தானா? செய்யற நமக்கே அலுப்பா இருக்கும்ல.அதான் எனக்குத் தெரிந்த சில ரெசிப்பிக்களைஉங்களுக்கு சொல்ல வந்தேன்.அவலை ஹிந்தியில்...தொடர்ந்து படிக்கவும் »
கிச்சன் கில்லாடி
ஆக்கம்: Ramya Ramani | July 26, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Ramya Ramani | July 26, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்
சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்.என்ன சுலபமா சொல்லிட்டாங்க? ஆனா நீங்க ஒரு கில்லாடி ஆகணும்னா என்ன பண்ணனும்?அதைச் சொல்லத்தானே இந்த பதிவு கவனமா குறிப்பு எடுங்க!சமையல் ஒரு கலை அதில் நீங்க வெற்றிப்பெற இரண்டு முக்கியமாத் தேவை.முதல்ல நீங்க பயிற்சி செய்ய ஒரு களம், அதை சமையல்கட்டுன்னும் பேச்சு வழக்குல சொல்லலாம்,அடுத்து நீங்க...தொடர்ந்து படிக்கவும் »
உடலுக்கு ஒரு ஏர் கண்டீஷனர்.
ஆக்கம்: புதுகைத் தென்றல் | July 25, 2008, 2:11 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | July 25, 2008, 2:11 am | தலைப்புப் பக்கம்
வெந்தயம் இதன் மருத்துவ நலன்களை நான் சொல்லத் தேவையில்லை.மேலதிக தகவல்களுக்கு இங்கே - விக்கிப்பீடியா.முடிந்த போதெல்லாம் வெந்தயத்தை நமது சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது.சாம்பார்,குழம்பு வகைகளுக்கு வெந்தயம் தாளித்தால்வாசனை ஊரைத் தூக்கும்.(வாயில் தட்டுப்படும் வெந்தயம் கசப்பை கொடுப்பதால்பலர் விரும்ப மாட்டார்கள்.) சரி இப்போது வெந்தயக் கீரை ரெசிப்பி சில...தொடர்ந்து படிக்கவும் »
சத்தான காய்கறின்னா… என்னென்ன தெரியுமா
ஆக்கம்: Abdul Malik | July 23, 2008, 5:04 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Abdul Malik | July 23, 2008, 5:04 am | தலைப்புப் பக்கம்
காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர் டாக்டர்கள். ஆனால், எல்லா காய்கறிகளும் பழங்களும் சத்தானவை என்று சொல்ல முடியாது.நாற்பது வயதை கடந்தால் சிலவற்றை ஒதுக்கி விட வேண்டும் என்று நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் சிலவற்றை என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால் அதில் உள்ள சத்துக்கள் பற்றி அறிவதில்லை.முள்ளங்கி தழையும் :முள்ளங்கி சாப்பிடும் பழக்கம் உண்டா?...தொடர்ந்து படிக்கவும் »
உபயோகமான சில சமையல் குறிப்புகள்
ஆக்கம்: Jil Jil | July 22, 2008, 10:22 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jil Jil | July 22, 2008, 10:22 pm | தலைப்புப் பக்கம்
சில சமையல் குறிப்புகள் நமக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். அந்த சமையல் குறிப்புகளை எல்லாம் தொகுத்து இங்கு வழங்கியுள்ளேன். இவை படித்ததில் பிடித்தது. நானும் இனிமேல் தான் உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டும். * புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால் தோசை சுவையாக இருக்காது. அந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து ஊற்றினால் தோசை மொறு மொறுவென்று...தொடர்ந்து படிக்கவும் »
டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் பகுதி 2..
ஆக்கம்: துளசி கோபால் | July 21, 2008, 8:16 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: துளசி கோபால் | July 21, 2008, 8:16 pm | தலைப்புப் பக்கம்
பதிவுலகில் ஒரே பூண்டு வாசனை வருதேன்னு பார்த்தால் நம்ம புதுகைத் தென்றல் பூண்டு ரசம், பூண்டு குழம்புன்னு தாளிச்சுக்கிட்டு இருக்காங்க.போனவாரம் சனிக்கிழமை கோயிலுக்குப் போயிட்டு வரும்போது அப்படியே சூப்பர் மார்கெட் விசிட். பால் வாங்க வந்தேன். நேராப் போனமா பாலை எடுத்தமா.....ஊஹூம்.....ஒரு சுத்துச் சுத்திட்டுப்போகணும், எல்லாப் பகுதிகளுக்கும். ஒவ்வொன்னும் ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »
தயிர் சேமியா
ஆக்கம்: Thooya | July 20, 2008, 2:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | July 20, 2008, 2:09 am | தலைப்புப் பக்கம்
தமிழ்சமையல் வலைப்பூ திரட்டிக்கான அடுத்த தயிர் பதிவுஎழுதியவர்: வரவனையான்கோவை அன்னபூர்னா உணவகத்தில் ஒருமுறை தயிர் சாதம் கேட்ட பொழுது தயிர் சாதம் இன்னும் ஆகவில்லை தயிர் சேமியா இருக்கு என்றனர். முதல் முறையாய் அப்போதுதான் கேள்விப்பட்டேன் அப்படி ஒரு உணவின் பெயரை. வரவழைத்து சாப்பிட்ட போது அதன் சுவை மிகவும் பிடித்து போய்விட்டது. அந்த கொங்கு நாட்டு உணவின் செய்முறை இதோ:...தொடர்ந்து படிக்கவும் »
தயிர் சலட்
ஆக்கம்: Thooya | July 19, 2008, 10:03 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | July 19, 2008, 10:03 pm | தலைப்புப் பக்கம்
களமுனையில் படுகாயம் அடைந்த என்னை சுகம் விசாரித்த உறவுகளுக்கு நன்றிகள். "யப்பா கொஞ்ச நாளைக்கு நிம்மதி" என நினைத்தவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் "இப்ப என்ன பண்ணுவிங்க, இப்பா என்ன பண்ணுவிங்க?" கிகிகிகிஇனி சமையல் பக்கம் போகலாம்: தமிழ்சமையல் வலைப்பூ திரட்டி பற்றி இங்கு பேச ஆரம்பித்தோம். வெறும் பேச்சோடு போய்விடாமல், அதற்கு உருவம் குடுத்துள்ளோம். இதுவரை ஆறு...தொடர்ந்து படிக்கவும் »
பூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | July 15, 2008, 2:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | July 15, 2008, 2:26 am | தலைப்புப் பக்கம்
பூண்டு மிக நல்லது. அரு மருந்து.நம் உடம்பை சுத்தப்படுத்துவதில் பூண்டு பெரும்பங்குவகிக்கிறது. வாரம் ஒரு முறை பூண்டை சமையலில்சேர்த்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.மிளகின் குணத்தை பற்றி சொல்ல ஒரு பழைய சொலவடைபோதும். ”4 மிளகை கையில் எடுத்துக்கொண்டு எதிரிவீட்டில் கூட சாப்பிட போகலாம் ”என்பார்கள்.விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.பூச்சிக்கடி போன்ற எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பல்லே பல்லே…
ஆக்கம்: para | July 9, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: para | July 9, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்
நாகராஜன் ருசித்துப் பார்த்து, அறிமுகப்படுத்திவைக்க, நேற்று செனடாஃப் சாலையில் உள்ள தாபா எக்ஸ்பிரஸில் மதிய உணவுக்காகச் சென்றேன். சந்தேகமில்லாமல் அடிமையாக்குகிறது. இன்றைக்கு மதியம் மீண்டும்.
பல வருடங்களுக்கு முன்னர், திரைப்பட விழாக்களுக்காகப் புது தில்லி செல்லும்போது சாலையோரத் தள்ளுவண்டி தாபாக்களில் சாப்பிட்டிருக்கிறேன். ஆகிருதியான சர்தார்ஜிக்கள் ஒரு வேள்வி...தொடர்ந்து படிக்கவும் »
Coconut Sorbet
ஆக்கம்: Thooya | July 7, 2008, 11:58 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | July 7, 2008, 11:58 pm | தலைப்புப் பக்கம்
ரொம்ப நாட்களாக சமையல்கட்டிற்கு விடுமுறை விட்டாச்சு. இனிமேலும் விடுமுறை எடுத்தால் சமையல்கட்டிற்கே மரியாதை இல்லாமல் போய்விடுமே. இங்கு எங்களுக்கு நல்ல குளிர். குளிரில் குளிர்களி சாப்பிடுவது தானே எங்களுக்கு மிகவும் பிடித்த விடயம். எப்போதும் குளிர்களி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. புதிதாக ஏதும் முயற்சிக்கலாமே என நினைக்கும் போது தான் என் அண்ணன் ஒருவர்...தொடர்ந்து படிக்கவும் »
செட்டிநாட்டு இறால் வறுவல்
ஆக்கம்: Thooya | June 24, 2008, 7:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | June 24, 2008, 7:14 am | தலைப்புப் பக்கம்
தேவையானப் பொருட்கள்இறால் - 1/4 கிலோ கிராம்வெங்காயம் - 2 பெரியது ( நறுக்கிக்கொள்ளவும் )பூண்டு - 10 பெரிய பல்சோம்பு - ஒரு தேக்கரண்டிசீரகம் - ஒரு தேக்கரண்டிதக்காளி - 2 பழம்தேங்காய் - கால் மூடி ( துருவியது)உப்பு - 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டிஇஞ்சி - ஒரு விரலளவுஎண்ணெய் - 2 தேக்கரண்டிகறிவேப்பிலை - ஒரு கையளவுவத்தல் மிளகாய் - 20 பெருசு பூண்டையும் இஞ்சியையும் நன்கு...தொடர்ந்து படிக்கவும் »
டிப்ஸ் வாங்கலையா......டிப்ஸு
ஆக்கம்: துளசி கோபால் | June 18, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: துளசி கோபால் | June 18, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்
அடுக்களை டிப்ஸ். சமையல் மட்டும் செஞ்சுகாமிச்சாப் போதாதாமே. இப்படிச் சமையல் வகுப்பு நடத்தறவங்க அப்பப்ப நேரம்/பணம் சேமிக்கும் டிப்ஸ்களையும் கொடுக்கணுமாம். இந்தக் கணக்கில் ஃப்ரீஸர் டிப்ஸ் இன்னிக்குப் பார்க்கலாம்:-) ரங்கி பி ரங்கியா ( கலர்க்கலரான்னு தமிழில்(?) அர்த்தம்) கிடைக்கும் (சீஸனில் மலிவாக் கிடைக்குமே அப்ப) குடமிளகாய்களைக் கொஞ்சம் வாங்கிக்குங்க. தண்ணீரில்...தொடர்ந்து படிக்கவும் »
பிரியாணி
ஆக்கம்: பிரேமலதா | June 5, 2008, 9:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பிரேமலதா | June 5, 2008, 9:02 am | தலைப்புப் பக்கம்
முதலில் என்ன நோட்ஸ்.
இஞ்சி அதிகம்
பூண்டு - 7 - 8 பல்
கெ.தழை
கிராம்பு - 6 ஏ - 6
பட்டை - சி.து.
எ…..-பி. 1, ஆ.2.
ப. 2 ஏ, 2கி.
வெ. ப. மிள
அரைச்சது.. சிம்
தக்காளி - 1 உப்பு மிள
வெஜ்ஜ் தயிர் - 2spoon
water, press cook
அரிசி - 2 கப் water gaske
கெ. புதினா
open boiling 6-7 min
———0———-
இப்போ
தேவையான பொருட்கள் (இரண்டுபேருக்கு ஆகும் அரிசிக்கு)
அரைக்க
இஞ்சி - அதிகம்
பூண்டு - 7 அ 8 பல்
கொத்தமல்லைத் தழை
கிராம்பு - 6
ஏலக்காய் - 6
பட்டை - சிறு துண்டு
பச்சை மிளகாய்...தொடர்ந்து படிக்கவும் »
போய்யா வெண்ணை......
ஆக்கம்: துளசி கோபால் | June 3, 2008, 8:31 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: துளசி கோபால் | June 3, 2008, 8:31 pm | தலைப்புப் பக்கம்
போய்யா வெண்ணை...... இருடீ.... ராஜம்மா வரட்டும்.அப்ப இருக்கு உனக்கு!வண்ணம் இல்லாமல் சோகையா வெளுத்துக்கிடக்கும் இது என்ன?பார்க்க அச்சு அசலா நம்ம பீன்ஸ் போலத்தானே இருக்கு? ஆஹா....'கப்'னு புடிச்சுட்டீங்களே. இங்கே இதுக்குப் பெயர் 'பட்டர் பீன்ஸ்'செஞ்சுதான் பார்க்கலாமுன்னுக் கொஞ்சம் வாங்கியாந்தேன். அந்தக் காலத்தில் நம்ம வீட்டுலே எப்பவும் பீன்ஸ் பொரியலுன்னாவே அது பருப்பு,...தொடர்ந்து படிக்கவும் »
மீன் சொதி
ஆக்கம்: Thooya | June 3, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | June 3, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்
எங்க சொதி இத்தனை பிரபலம் என எனக்கு தெரியாது. சொதி செய்முறை தெரியுமா? சொதி என்றால் என்ன? சொதி செய்முறை எப்ப எழுதுறிங்க என பல உறவுகள் கேட்டுக்கொண்டேயுள்ளனர். எத்தனை நாளுக்கு தான் "விரைவில் எழுதுகிறேன்" என ஏமாற்றுவது. சொதியில் பல வகை உண்டு: சைவம் & அசைவம். சைவ சொதியில் வெள்ளைச்சொதி, மஞ்சள் சொதி என இருவகை உண்டு. அசைவத்தில்....அப்பப்பா எண்ணிலடங்கா..சுவையோ சொல்லில்...தொடர்ந்து படிக்கவும் »
ஈஸியாக செய்யும் குழம்பு வகைகள் :
ஆக்கம்: சித்ரா | June 3, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சித்ரா | June 3, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்
மெக்ரோனி புளிகுழம்பு:தேவையானவை: மெக்ரோனி- 200கிராம்,பெரிய வெங்காயம்- 2,தக்காளி-5,புளி விழுது- 1 ஸ்பூன்,இஞ்சி, பூண்டு விழுது- 1 ஸ்பூன்,மிளகாய்தூள்- 1 ஸ்பூன்,மல்லி தூள்- 1/2 ஸ்பூன்,உப்பு தேவையானவை.வெந்தயம், சோம்பு, - 1/4 ஸ்பூன்.எண்ணெய்- 50 கிராம்.செய்முறை: மெக்ரோனியை சுடுநீரில் போட்டு கொதி வந்தவுடன் வடித்து, மறுபடியும் நீர் ஊற்றி வடித்து வைக்கவும். வெந்தயத்தை லேசாக...தொடர்ந்து படிக்கவும் »
மிளகு ரசம்
ஆக்கம்: Thooya | June 1, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | June 1, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்
பொதுவாக சைவ உணவு உட்கொள்ளும் நாட்களில் "ரசம்" நிச்சயமாக எங்க வீட்டில் இருக்கும். பொதுவாக வெள்ளிகிழமைகளில் பல ஈழ தழிழர்கள் வீட்டில் ரசம் இல்லாமல் இருப்பதில்லை என்றே கூறலாம். சொதியை நேருக்கு நேரே மோதும் தகுதி கொண்டது இது தான். பல வகையான ரசம் இருப்பினும், மிளகு ரசத்திற்கு குடுக்கப்படும் ஆதரவு போல் மற்றவற்றுக்கு கிடைப்பதில்லை எனலாம். திடிரென சமைக்கும் போது கை...தொடர்ந்து படிக்கவும் »
கேரட் சட்னி / carrot chutney
ஆக்கம்: கீதா | May 31, 2008, 9:47 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கீதா | May 31, 2008, 9:47 pm | தலைப்புப் பக்கம்
தேவையான பொருட்கள்
கேரட் - 4
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 3 பற்கள்
புளி - நெல்லிக்காய் அளவு
எள் - 1 தே. கரண்டி
சீரகம் - 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் - 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் - தாளிக்க
எண்ணை - சிறிதளவு
செய்முறை
கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து...தொடர்ந்து படிக்கவும் »
இடிச்ச சம்பல்
ஆக்கம்: Thooya | May 31, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | May 31, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்
இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
மனிதனும் மர்மங்களும்
ஆக்கம்: Iniyal | May 30, 2008, 11:28 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Iniyal | May 30, 2008, 11:28 pm | தலைப்புப் பக்கம்
சில நாட்களாக என் வாசிப்பு கொஞ்சம் குறைந்து விட்டிருந்தது, அதை கொஞ்சம் தட்டி எழுப்பிய புத்தகம் மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும், அருமையான புத்தகம்.புத்தகமுகப்பிலேயே இது கொஞ்சம் பய அனுபவத்தை எற்படுத்தும் என்ற உணர்வை தரும் விதத்தில் எலும்புக்கூடுகள் காட்சி அளிக்கின்றன, எனினும் அதுவே ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது. பல பேய்கள் பற்றிய உண்மைகள் ஆராய்ச்சிகள் நமக்கு தெரிய...தொடர்ந்து படிக்கவும் »
ப்பைனாப்பிள் தயிர்க் குழம்பு
ஆக்கம்: viji | May 29, 2008, 2:08 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: viji | May 29, 2008, 2:08 pm | தலைப்புப் பக்கம்
இது ரொம்ப நாள் முன்னாலேயே என் நண்பர் ஜேம்ஸிடமிருந்து கற்றது. எழுதனும்னு நினச்சி சோம்பேரித்தனதால இவ்ளோ நாளாகிடுச்சி, போனாவாரம் சன்டே மார்கட்ல 50 சென்ட்க்கு ப்பைனாப்பிள் பார்த்த உடனேயே வாங்கிட்டு வந்தாச்சி. சமையல்ல எக்ஸ்பிரிமெண்ட் செஞ்சு பார்க்க நண்பர்கள் இருக்கும் போது என்ன கவலை. இதோ புதுசா தயிர்க் குழம்பு( மோர்க் குழம்பு இல்லீங்கே இது )சரி என்னேல்லாம் வேனும்:கெட்டி...தொடர்ந்து படிக்கவும் »
அவல் உப்புமா
ஆக்கம்: சித்ரா | May 28, 2008, 12:18 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சித்ரா | May 28, 2008, 12:18 am | தலைப்புப் பக்கம்
தேவையானவை; கெட்டியான அவல்- 1 கப்,பெரிய வெங்காயம்-2,பச்சை மிளகாய்-5,இஞ்சி- சிறிய துண்டு,தேவையான காய்கள் பொடியாக நறுக்கி கொள்ளவும்-1 கப்தக்காளி-2, பொடியாக நறுக்கி கொள்ளவும்.உப்பு- தேவையானவை.எண்ணெய்- தேவையானது.செய்முறை; அவலை மிக்ஸியில் ரவையாக உடைத்து 2 முறை கழுவி உடனே சுத்தமாக தண்ணீரை வடித்து வைத்து விட வேண்டும். அதனுள் இருக்கும் நீரே ஊற போதும். கொஞ்ச நேரத்தில் ஊறி கையில்...தொடர்ந்து படிக்கவும் »
இட்லி உப்புமா
ஆக்கம்: சித்ரா | May 28, 2008, 12:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சித்ரா | May 28, 2008, 12:06 am | தலைப்புப் பக்கம்
தேவையானவை; இட்லி- 10,பெரிய வெங்காயம்-2,இஞ்சி- பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,பச்சை மிளகாய்-5,பீன்ஸ், கேரட், குடமிளகாய்- பொடியாக நறுக்கியது- 1 கப்உப்பு- கொஞ்சம்,செய்முறை; இட்லியை ப்ரிஜ்ஜில் வைத்தால் உதிர்த்தால் உதிராக வரும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் இஞ்சி, போட்டு வதக்கி, அதனுடன் காய்கள், உப்பும் போட்டு 1...தொடர்ந்து படிக்கவும் »
ரவா உப்புமா
ஆக்கம்: சித்ரா | May 27, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சித்ரா | May 27, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்
தேவையான பொருள்கள்; ரவை - 1 கப்,பெரிய வெங்காயம்- 2 ,இஞ்சி- சிறியதுண்டு,பச்சை மிளகாய்-5,உப்பு- தேவையானவை,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.தாளிக்க- கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு.செய்முறை; ரவை வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். அதே வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். கொஞ்ச...தொடர்ந்து படிக்கவும் »
அரிசி ரவை மிளகு உப்புமா.
ஆக்கம்: சித்ரா | May 27, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சித்ரா | May 27, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்
தேவையான பொருள்கள்; பச்சரிசி [அ] புழுங்கல் அரிசி-1கப்துவரம்பருப்பு-2 ஸ்பூன்,கடலைபருப்பு-2 ஸ்பூன்,சீரகம்-1/4 ஸ்பூன்,மிளகு--1 ஸ்பூன்,வரமிளகாய்- 4,துறுவிய தேங்காய்- கொஞ்சம்,உப்பு- தேவையான அளவு.பிடித்தமான எண்ணெய்- கொஞ்சம்.தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் கொஞ்சம்,கறிவேப்பிலை, மல்லி இலை- கொஞ்சம்.செய்முறை:அரிசி பருப்புகளை லேசாக வறுத்து மிக்ஸியில்...தொடர்ந்து படிக்கவும் »
கத்தி குடுத்த வீரத்தழும்புகள்
ஆக்கம்: Thooya | May 26, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | May 26, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
சமையல் என்றது எத்தனை பெரிய விசயம் என்று உங்களுக்கே தெரியும். வலைப்பூக்களையே எடுங்க, சமையல் வலைப்பூக்களில் மறுமொழிகள் வருதோ இல்லையே, பல பார்வையாளர்களா இருப்பாங்க. சிலருக்கு சமைக்க பிடிக்கும். சிலருக்கு சமைச்சாகணுமே என அலுத்திட்டு சமைப்பாங்க. எது எப்படியாயினும் சமைக்கிறதில மூன்று கொடுமையான விசயம் இருக்கு.1. கத்தியால் வெட்டுவது [

